நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினை கண்டித்து திருமலையில் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் , கதிரவன்
நாட்டில் நிலவும் பொருலாதார நெருக்கடிக்கு காரணம் இந்த அரசாங்கமே என குறிப்பிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வாகணப் பேரணி ஒன்று இன்று (24) திருகோணமலையில் இடம்பெற்றது.

கந்தளாயில் இருந்து ஆரம்பித்து திருகோணமலை நகரை வந்தடைந்த குறித்த பேரணியில் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் அருண் ஹேமச்சந்திரா,
நாட்டில் நிலவி வருகின்ற பொருளாதார நெருக்கடி
எரிபொருள் விலையேற்றம், அத்தியாவசிய பொருற்களின் விலையேற்றம் என்பவற்றுக்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிப்பீடம் ஏறிய குறித்த அரசாங்கமானது மக்களை ஏமாற்றி வருகிறது, நாட்டினை சுபிட்சமான நாடாக மாற்றுவோம் என்ற பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசானது தற்போது எந்த வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடிக்குமோ என்ற பீதியில் மக்களை தள்ளியிருக்கிறது.
இந்த நாட்டிலே வாழ முடியாத நிலை காரணமாக ஆயிரக்கணக்கான நபர்கள் இந்த நாட்டை விட்டு வெளியே சென்று கொண்டு இருக்கிறார்கள், நத்தார் மற்றும் புதுவருட காலப்பகுதியில் மக்களது வாழ்க்கைச் சுமை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து காணப்படுகிறது, நாட்டில் அனைத்து அத்தியாவசியமன பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டிருக்கிறது, இது மக்களை சொல்லொண்ணா துயரத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது, இதனைத் தாம வன்மையாக கண்டிப்பதாகவும் இதற்கு கூடிய விரைவில் இந்த அரசாங்கம் தீர்வினைப் பெற்றுத் தரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஏமாற்றும் அரசை நம்பாமல் மக்கள் விடுதலை முன்னணியுடன் பயணித்து இந்த நாட்டினை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்று திரள வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்

dav
dav