‘சமூர்த்தி சௌபாக்கியா’ வாரத்தை முன்னிட்டு உதவித் திட்டம் மன்னாரில்.

( வாஸ் கூஞ்ஞ) ‘சமூர்த்தி சௌபாக்கியா’ வாரத்தை முன்னிட்டு சமூர்த்தி வதிவிட பொருளாதார நுண் நிதிய சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் துரித நடவடிக்கைக்கு அமைய பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதார மேம்பாட்டை கருத்திற் கொண்டு கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வாழ்வாதார அபிவிருத்தியை மேலோங்கச் செய்யும் நோக்கில் மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 198 பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவித் தொகையும்அத்துடன் சேர்த்து 21 மாணவ மாணவிகளுக்கான சிப்தொர புலமைபரிசிலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் புதன்கிழமை (22)  மடு பிரதேச செயலகத்திலும் பின் இதைத் தொடாந்து மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலும் வைத்து வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வுகளில் மடு மற்றும் மன்னார் பிரதேச செயலக பிரதேச செயலாளர்கள் திரு. நிஜாகரன், ம.பிரதீப் சமூர்த்தி பணிப்பாளர் ஐ . அலியார், பிரதேச செயலக கணக்காளர்கள் தனியார் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப். மிஹ்லார் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள், பயனாளிகள்,  மாணவர்கள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.