விவசாயப் புரட்சியாளர்கள் எனும் நாமம் சூட்டி மூத்த விவசாயிகள் கெளரவிப்பு.

(வவுணதீவு திருபர் ) சர்வதேச விவசாயிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முறை மேற்கு விவசாயிகளை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் விவசாயப் புரட்சியாளர்கள் எனும் நாமம் சூட்டி மூத்த முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (23) மாலை வவுணதீவு உழவர் சந்தியில் இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் ஆர். குணாநிதி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன், மண்முறை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், விதை நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலைய பிரதி விவசாய பணிப்பாளர் ஆர். சிவனேசன், உறுகாம நீர்பாசன திட்ட பொறியியலாளர் ஏ.விஸ்ணுரூபன், வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி.எஸ். பிரியங்கர மற்றும் பட்டிருப்பு, கல்குடா மட்டக்களப்பு பிரதேச தமிழ் விவசாயிகள் அமைப்பினர், கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதிநிதிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இதன்போது 12 முத்த முன்னோடி விவசாயிகளுக்கு மாலை மகுடம், பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி அதிதிகளால் கெளரவிக்கப்பட்டனர்.

வரலாற்றில் முதல் தடவையாக இம் மாவட்டத்தில் சர்வதேச விவசாயிகள் தினக் கொண்டாட்டத்தில் முத்த முன்னோடி விவசாயிகள் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.