மட்டக்களப்பில் கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு மூன்று நாள் செயலமர்வு.

மட்டக்களப்பில் கிராம சேவை உத்தியோகத்தர்களது திறனை மேலும் வலுப்படுத்தும் முகமாக மாவட்ட மட்டத்தில் மூன்று நாள் செயலமர்வு புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மண்முனை வடக்கு முதல் போரதீவுபற்று வரையான பிரதேச செயலகங்களிள் கடமையாற்றும்  கிராம சேவகர்களிற்கு சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான பயிற்சிகளுடன் கிராம அலுவலரின் சேவை மற்றும் விடையதானகள், தலைமைத்துவம், முகாமைத்துவம், மேலாண்மை தொடர்பாக இம்மூன்று நாள் செயலமர்வு வழங்கப்படுன்கிறது.
மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், அம்பாறை மாவட்ட மருதமுனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஜி.ரி.ரி. துசார ஜயலத் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கிராம அலுவலர் தமது சேவை செய்யும் போது அதனுடன் தொடர்புடைய கட்டளைச்சட்டங்கள் நடை முறைப்படுத்துதல், அடிப்படை சுய பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள், கிராம அலுவலர் நேரடியாக வழக்கு தாக்கல்  செய்தல் மற்றும் அது சம்பந்தமான நடவடிக்கைகள், சாட்சியங்களை நீதி மன்றங்களுக்கு அழைத்து செலுத்தல், தகவல் பதிவு செய்தல், சாதாரண மரணம், விபத்து என்பனவற்றை அடையாளம் கண்டு அதற்குரிய வழிமுறைகளை நடை முறைப்படுத்துதல், முறைப்பாட்டை பெற்றுக் கொண்டு அவற்றை விசாரணை செய்தல், தேவையான போது அதிகாரத்தை பயன் படுத்தும் முறை தொடர்பான விளக்கங்களும் இங்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.