மருதமுனை சம்ஸ் தேசிய பாடசாலையில்  Wi-Fi வலையம் திறந்து வைப்பு.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலையில் 10 இலட்சம் ரூபாய் செலவில் Wi-Fi வைபர்  இணையதள சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு  நேற்று பாடசாலையின் அதிபர் எம்.எம். ஹிர்பகான் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலையின் கற்றல் – கற்பித்தல்  செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில்  கல்வி அமைச்சு, கிழக்குமாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் என்னப இணைந்து இந்த வேலைத்தை முன்னெடுத்து வருகின்றன.

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை ஸம்ஸ் தேசிய பாடசாலையில் புதிய துரித இணையத்தள சேவை மற்றும் வைபர் வலயம் என்பவற்றை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன்
பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின் போது மாணவர்களுக்கு லேப் டொப் வசதியுடனான ஒன்லைன் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க கூடிய ஸ்மார்ட் வகுப்பறை, தொழில் நுட்பப் பிரிவுக்கான நவீன வகுப்பறை மற்றும் தொழில் தேர்ச்சி கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்குரிய புதிய வகுப்பறை என்பனவும் திறந்து வைக்கப்பட்டன.

வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளர் வை.கபீபுல்லா, பாடசாலையின் முன்னாள் அதிபர் ஏ.எல். சக்காப், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர்  சுஹைல் ஜமால்தீன் உட்பட பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.