(க.ருத்திரன்) மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாகநேரியில் குளத்துமடுவில் காணமல் போயிருந்த குடும்பஸ்த்தரின் சடலத்தினை வாகநேரி ஆற்றுப் பகுதியில் நேற்று திங்கள் மாலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை (18) மாடு மேய்க்கவென்று சென்றவர் வீடு வந்து சேராதனால் உறவினர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று திங்கள் கிழமை மாலை (20) குறித்த நபரின் சடலம் ஊரியன் கட்டு ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.குளத்துமடு வாகநேரியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான மு.செல்லத்தம்பி வயது (56) என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மரண விசாரணைகளை கோறளைப்பற்று பிரதேச திடிர் மரண விசாரணை அதிகாரி வ.றமேஸ்ஆனந்தன் மேற்கொண்டார். குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
|