திருக்கோவில் பிரதேச செயலகத்தில் சேவைநலன் பாராட்டு விழா.

(திருக்கோவில்  நிருபர்-எஸ்.கார்த்திகேசு) அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கிராம சேவையாளராகவும் கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தராகவும் 33வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற கண.இராஜரெத்தினம் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்று இருந்தன.

அரச சேவை நலன் பாராட்டு நிகழ்வானது கிராம சேவை உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலக கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.கந்தசாமி தலைமையில் பிரதேச செயலகத்தின் இடம்பெற்று இருந்தன.

1988ஆண்டு முதல் கிராம சேவையாளராக இருந்து திருக்கோவில் பிரதேசத்தில் யுத்த காலம் தொடக்கும் 2009ம் ஆண்டு மீள் குடியேற்றம் மற்றும் 2004, சுனாமி 2019 தொடக்கம் 2021 வரை கொரோனா நோய்த் தாக்கம் முதலான அனர்த காலங்களில் பிரதேச மக்களுக்காக மிகவும் சிறப்பாக சேவையாற்றி இருந்ததோடு சேவையின் இறுதிக் காலத்தில் கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தராகவும் சுமார் 33 வருடங்கள் அரச சேவையாற்றி; ஓய்வு பெற்றுச் சென்ற கண.இராஜரெத்தினம் அவர்களுக்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பா மற்றும் நினைவுப் பரிசில்கள் என்பன வழங்கி நன்றி உபசார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்று இருந்தன.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் கணக்காளர் எம்.அரசரெத்தினம் நிருவாக உத்தியோகத்தர் ரீ.மோகனராசா மற்றும் கிராம சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.