திருகோணமலை மாவட்டத்தில் வைத்தியர்கள் 24 மணிநேர தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் 24 மணிநேர தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இவ் தொழிற்சங்க போராட்டம் இன்று (20) திங்கட்கிழமை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இவ் ஆர்பாட்டமானது பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படுகின்றது அதன்படிசுகாதாரத்துறை செயலாளர் ராணுவ மனோபாவத்துடன் செயல்படுவதாகவும் சேவை இல்லாத மருத்துவமனை மற்றும் கோவிட் சிகிச்சை மையங்களின் வேலைவாய்ப்புப் பட்டியலுக்குப் பின் அடுத்த வாரப் பட்டியலைப் பொறுப்பேற்க வேண்டும்.

இன்று திங்கள்கிழமை அமலுக்கு வரும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இவ் தொழிற்சங்க நடவடிக்கைக்கு  சுகாதார அமைச்சு  அக்கறை காட்டவில்லை என்றால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) மத்திய குழுவின் அவசரக் கூட்டத்தை இன்று திங்கட்கிழமை  கூட்டி மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் மாத்திரம் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையினை  நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் எனவும் இவ் தொழிற்சங்க நடவடிக்கையினை தொடர்ச்சியாக முன்னெடுப்பதா இல்லையா என்ற  தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும்.

மேலும் இவ் சுகாதாரத்துறை செயலாளரின் இந்த செயற்றப்பாடு குறித்து இன்று கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் புகார் ஒன்றும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி திருக்கோமாலை பொது வைத்தியசாலையில் 176 வைத்தியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்ட வேண்டும் இருப்பினும் தற்போது 101 வைத்தியர்களே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இவற்றுள் 27 வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாவும் அவ்வாறு இடமாற்றம் வழங்கபட்டால் 74 வைத்தியர்களே மிகுதியாக பணியில் இருப்பார்கள். மேலும் குச்சவெளி கொரோனா வைத்தியசாலையில் 80 கோவிட் நோயாளிகள் சிகிச்சைபெற்று வரும் நிலையில் அவர்களை பராமரிக்க மூன்று வைத்தியர்களே பணியில் அமர்த்த பட்டுள்ளனர் இவ்வாறான குறைபாடுகள் மேல்குறிப்பிட்ட நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களின் ஊடாக இடம்பெறுவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

இவ் வைத்தியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள்  காத்திருந்து தூர இடங்களில் இருந்து வருகைதந்த நோயாளிகள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி திரும்பி செல்வதனை  எம்மால் அவதானிக்கமுடிந்ததுடன்

மேலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர நோயாளி பராமரிப்பு சேவைகள்,மற்றும் கிளினிக் சேவைகள்  எந்தவித இடையூறும் இன்றி வழமைபோல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.