மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையினால்  நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு.

 

(ரக்ஸனா)  மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையினால் சுழல்காற்றினால் பாதிப்படைந்த மக்களுக்கான இடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலக பிரிவில் கொத்தியாபுலை கிராமத்தில் சனிக்கிழமை (18) பிற்பகல் வேளையில்  பெரும் மழையுடன் வீசிய கடும் சுழல்காற்றினால் வீட்டுக்கூரைகள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட  மக்களுக்கு கூடாரங்களும், உலர் உணவுப்பொதிகளும் மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை(19)  இடர் நிவாரண உதவிகளாக வழங்கிவைக்கப்பட்டது.

 

இவ்மனிதாபிமான உதவியை ஆனந்தகிரி அறப்பணி சபையின் தலைவர் லோ.தீபாகரன், செயலாளர் நே.பிருந்தாபன், அமைப்பின் பிரதான இணைப்பாளர்  உ.சுரேஸ்குமார், வாகரை பிரதேச இணைப்பாளர்  விக்கி, வவுணதீவு பிரதேச இணைப்பாளர் விமல்ராஜ் ஆகியோர் சம்பவம் இடம்பெற்ற வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கிவைத்தனர். இவ் இடர்உதவிக்கான  கூடாரங்களை  கொள்வனவு செய்வதற்கு  குருக்கள்மடத்தை சேர்ந்த ம.ராஜதீபன் அவர்களும் உலர் உணவுப்பொதிகளை கொள்வனவு செய்வதற்கு அறப்பணி சபையின் வாகரை பிரதேச இணைப்பாளர்  விக்கி அவர்களும் அனுசரணை வழங்கினர்.

 

இவ்அனர்த்தத்தினால்  இப்பகுதியில் பலவீடுகளின் கூரைகள் சேதமடைந்ததுடன், பலன் தரு மரங்களும் முறிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.