யானை தாக்கி மரணம்.!

(ஆர்.  சமிரா )வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இளைஞரொருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை சிவபுரி பகுதியைச் சேர்ந்த சிவபாலசுந்தரம் மயூரன் (வயது 33) 69 வது தேசிய பூப்பந்தாட்ட விளையாட்டு நிகழ் கொமும்பில் நடைபெற்று வருகின்ற நிலையில் இவர் அதன் நடுவராக செயற்பட்டு வந்துள்ளார்.
கொமும்பில் இருந்து வவுனியா நோக்கி ரயிலில் வருகை தந்த அவர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த போது வீதியை கடக்க முற்பட்ட யானை இவரை தாக்கியதாகவும் தெரியவருகின்றது.