பேசாலையில் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு பாரிய சிரமதானம்.

( வாஸ் கூஞ்ஞ) 18.12.2021

மன்னார் மாவட்டத்தில் மக்கள் செறிந்து வாழும் ஒரு கிராமமாக விளங்கும் பேசாலை பகுதியில் டெங்கு நோய் தீவிர பிரதேசமாக காணப்படுவதாக சுகாதார பகுதினரால் அடையாளமிடப்பட்டதைத் தொடர்ந்து இவ் கிராமத்தில் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு பாரிய சிரமதான பணிகள் இடம்பெற்றன.

இவ் நிகழ்வின் இரண்டாவது சிரதான பணி சனிக்கிழமை (18.12.2021) இடம்பெற்றது.

அன்மையில் மன்னார் பகுதியில் பெய்த மழையினால் என்றும் இல்லாதவாறு இவ் பேசாலை பகுதி வெள்ளத்தினால் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றது.

இதன் காரணமாக இப் பகுதியில் தொடர்ந்து வீடுகளும் மற்றும் பல இடங்களில் வெள்ளநீர் வற்றாத நிலையிலேயே காணப்பட்டு வருகின்றன.

இதன்நிமித்தம் இவ் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர் தொடக்கம் பெரியோர் வரை டெங்கு நோய்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு உள்ளாகி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ் டெங்கு நோயிலிருந்து மக்களை காப்பாற்றும் நோக்குடன் சனிக்கிழமை (18.12.2021) பேசாலையில் காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இப்பகுதியிலள்ள சகல வர்த்தக நிலையங்கள் இவ்வூரிலிருந்து மேற்கொள்ளப்படும் போக்குவரத்து சேவைகள் மீனவர்கள் கடலுக்குச் செல்லுதல் போன்ற அனைத்து செயல்பாடுகளும் முடக்கப்பட்டு இவ் பொது சிரமதான பணிகள் இடம்பெற்றது.

பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கு தந்தை ஏ.ஞாணப்பிரகாசம் அடிகளார்  தலைமையில் நடைபெற்ற ஆலய மேய்ப்புப்பணி மற்றும் இவ் கிராமத்திலுள்ள சகல அமைப்புக்களின் ஏற்பாட்டிலேயே இவ் சிரமாதன பணி இடம்பெற்றது.

ஒரு வாரத்துக்குள் இங்கு மேற்கொள்ளப்பட்ட பாரிய சிரமான பணியானது இது இரண்டாவதாகும் என்பதும் குறிப்படத்தக்கது