குளோபல் வன் நிறுவனத்தினால் குச்சவெளி பிரதேசத்தில் வீடமைப்பு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா.!

(சமிரா)
அநாதைகள் மற்றும் பாதிக்கப்பட்ட வறிய சிறார்களின் குடும்பங்களுக்கான 25 நிரந்தர வீடுகளை 2022 இல் அமைக்கும் குளோபல் நிறுவனத்தின் செயற்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக பென்னி அப்பீல் அவுஸ்திரேலிய நிறுவனத்தின் நிதியுதவியுடன் இரு மாதிரி வீடுகளை  அமைப்பதற்கான  அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று 17.12.2021 குச்சவெளி பிரதேச செயலக செந்தூர் கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வு குளோபல் வன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பளர் திரு. எம்.எம்.அன்சாரி, மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் திரு. கு. குணநாதன் அவர்களின் தலைமைய உத்தியோகபூர்வமாக அடிக்கல் நாட்டி ஆரம்பிக்கப்பட்டது. இவ் வைபவத்தில் திரியாய் வட்டார உறுப்பினர் திரு. வ.மு. ரிசாத், சர்வ மதத் தலைவர்கள், மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.