ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த தார்மீக சமுதாயம் ஒன்றை உருவாக்கல் நிகழ்வு அரசடித்தீவில்.

ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த தார்மீக சமுதாயம் ஒன்றை உருவாக்கும் நிகழ்ச்சி இன்று(18) அரசடித்தீவு கிராமத்தில் இடம்பெற்றது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து அரசினால் முன்னெடுக்கப்படும் தெய்வீக கிராமம் நிகழ்ச்சி திட்டத்திற்கமைய “ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த தார்மீக சமுதாயம் ஒன்றை உருவாக்குதல்” எனும் தொனிப்பொருளில் அரசடித்தீவு ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலய முன்றல், பாலர் பாடசாலை ஆகிய இடங்களில் கலாசார நிகழ்வுகளை நடாத்தினர்.

இதன்போது விழிப்பூட்டும் வீதியூர்வலமும், ஆலயத்தில் பூசை வழிபாடும் இடம்பெற்றதை தொடர்ந்து மாணவர்களின் நடனங்கள், பக்தி பாடல்கள், விழுமியக்கருத்துக்கள் நிறைந்த சொற்பொழிவுகள் என்பன இடம்பெற்றன.

கலாசார உத்தியோகத்தர் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்வில்  தவிசாளர், பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், விரிவுரையாளர், பாடசாலை அதிபர், கிராம உத்தியோகத்தர்,  கிராம பெரியார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.