சக்தி பால் நிலையம் திறப்பு விழா.!

(அ . அச்சுதன் ,  சமிரா )

திருகோணமலை நகரத்தில் திருகோணமலை கூட்டுறவுச்சபை கட்டடத்தில் இயங்கி வரும் சக்தி பால்வியாபார நிலையம் கால்நடை வளங்கள், பண்ணை மேம்பபாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில்இராஜாங்க அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண கால்நடை சுகாதாரத்திணைக்களத்தின் நிதிஉதவித்திட்டத்தின் அடிப்படையில் 16.12.2021. அன்று 12.30 மணிக்கு வைபவ ரீதியாகதிறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக கிழக்கு மாகாண விவசாய அமைச்சின்  செயலாளர்திருமதி .கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டு பெயர்பலகையினை திரை நீக்கம் செய்துசக்தி பால் வியாபார நிலையத்தினை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை உற் பத்தி சுகாதாரத் திணைக்களத்தின்
மாகாணப்பணிப்பாளர் திரு Dr. M.A.M Fazi மற் றும் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளர் Dr S. Nizamdeen மற்றும்
திருகோணமலை பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி Dr R. Arunthavarasa மற்றும் கால்நடைஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வியாபார நிலையத்தில்பாலினை கொள்வனவு செய்வோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இத்திறப்பு விழா வைபத்தினை திட்டத்தின் பயனாளிகளான சக்தி பால் வியாபார நிலையத்தின்உரிமையாளர் திருமதி காயத்திரி ரவிகாந்தன் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார். இச் சந்தர்ப்பத்தில்அவர் விருந்தினர்களை வரவேற்றதுடன் தனது நன்றியயும் தெரிவித்தார். இச்சந்தர்ப்பத்தில் அவர்
தனது தொழிலை கடந்து ஒன்பது வருடங்களுக்கு முன்னர் சிறியளவில் ஆரம்பித்ததாகவும்  மெதுவாகமுன்னேறி திருகோணமலை நகரில் அதிகாலை 4. 30 மணிக்கு தொடங்கி வீடுகளுக்கான பால்வினியோகத்தினை மேற்கொண்டதாகவும் தன்னால் 300 லீற்றர் பாலினை விற்பனை செய்ததாகவும்
கடந்த இரண்டு வருடங்களாக பால் உற்பத்தி குறைவடைந்து தற்போது 60 லீற்றர் பாலினை மட்டுமேவியாபார நிலையத்தில் வைத்து விற்பனை செய்வதாகவம், இதனால் தனது தொழிலினை தொடர்ந்துநடத்துவது கஸ்ரமாக உள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் தற்போதய நாட்டில் நிலவும் பால்மா
பற்றாக்குறை காரணமாக பசுப்பாலுக்கான பாவனையாளாகள் அதிகரித்துள்ளதாகவும், அதனைநிவர்த்தி செய்யமுடியாதுள்ளதாகவும் ; தெரிவித்தார். அத்துடன் பால் உற்பத்தி தொழில் தொடாபாக
தொழில்துறை திணைக்களத்தில் பயிற் ;சியினை உரிய முறைப்படி பெற்றுக்கொண்ட சான்றிதழினையும்காண்பித்தார்.
அதனை தொடர்ந்து சிறப்புரையாற்றிய செயலாளர் அவர்கள் இப்பயனாளியின் முயற்சியினைபாராட்டியதுடன் மக்களுக்கு சிறப்பான சேவையினை வழங்கி வருவதாக தெரிவித்தார். அத்துடன்இவருடைய வியாபார நிலையம் ஊடாக மக்களுக்கு தூய பசும்பாலை தொடர்ந்தும்விநியோகிப்பதற்காக பாலினை பெற் றுக்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை மாகாணகால்நடைதிணைக்களம் மேற்கொள்ள வேண் டும் என்று கேட்டுக்கொண்டார். அத்துடன்
திட்டத்தினூடாக பயனாளிக்கு வழங்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மாகாண பணிப்பாளர் இப்பயனாளி தொடர்ந்தும் ; ஆர்வமாகசெயற்படுவதை அவதானித்து திட்டத்திற்குள் இணைத்துக் கொண்டதாகவும் பல்வேறுஆலோசனைகளை தொடர்தும் வழங்கி வருவதாகவும் தெரிவத்ததுடன், திணைக்களம் ஊடாககால்நடை வைத்திய அதிகாரியினூடாக இவரது பால் தேவையை பூர்த்திசெய்து வைக்க முடியம்
என்று தெரிவித்தார்.