முஷர்ரப் முதுநபீன் எம்.பி இறக்காமம் பிரதேசத்திற்கு நிதி ஒதுக்கீடு !

(நூருல் ஹுதா உமர்)2021 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷர்ரப் முதுநபீனின் பன்முகப்படுத்தப்பட்ட  நிதியிலிருந்து 8,25,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள், சங்கங்கள், பொது நிறுவனங்கள், கழகங்கள், மதஸ்தலங்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலக கூட்ட  மண்டபத்தில் இறக்காமம் உதவி பிரதேச செயலாளர்  எம்.ஏ. சி. அஹமட் நஸீலின் தலைமையில்இடம்பெற்றது.இந்நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷர்ரப் முதுநபீனின் இணைப்புச் செயலாளர் எஸ்.டி. நியாஸ் பங்கேற்று உரிய நிறுவனங்களுக்கு பொருட்களை வழங்கி வைத்தார். மேலும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரதேச இணைப்புச் செயலாளர் எஸ்.எம்.எம். றஜா உட்பட  உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.