ஹாபிஸ் நசீர் அஹமட் பா.உ
ந.குகதர்சன்
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் இவ்வருடத்தின் இறுதி அபிவிருத்தி குழுக்கூட்டம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இன்று நடைபெற்றது.
பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி கூறியதோடு எதிர்காலத்தில் இதேபோன்று இப்பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரச அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேட்டுக் கொண்டார்.
அரசாங்கம் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிற்கும் 30 இலட்சம், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருக்கு 10 கோடியும், உள்ளுராட்சி மன்ற உறுப்பினருக்கு 40 இலட்சமும் என்ற அடிப்படையில் திட்டங்கள் முன்மொழியப்பட்டு இதற்காக வேண்டி மத்திய அரசாங்கத்தில் இருந்து நிதி அமைச்சிலிருந்து இத்திட்டத்தை பரிசீலனை செய்வதற்கு குழு ஒன்று எதிர்வரும் 21ஆம் வருகை தரவுள்ளனர்.
எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது சட்ட ரீதியற்ற முறையில் எமது காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. இதனை வென்றெடுப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எமது சமூகம் தூங்கிக் கொண்டிருந்த போது எமது கண்ணை மறைத்து காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த சமூகம் தூங்கப்போகின்றதா” என்று சபையினரை நோக்கி பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், முன்னாள் ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.ஐதஸ்லிம், வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.


