வறுமைக் கோட்டின் கீழ் வாழும்  இரு குடும்பங்களுக்கு மக்கள் சேவை மன்றத்தினால் நிரந்தர வீடுகள் வழங்கி வைப்பு.!

(சமிரா)
வாழ்வதற்கான இல்லறம் செயற்றிட்டத்தின் கீழ் வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மேலும் இரு குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து அவற்றினை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாாிஸ் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் பங்குபற்றுதலுடன் நேற்று (16)இடம்பெற்றது.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மிக நீண்டகாலம் மண் குடிசைகளில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வந்த இரு குடும்பங்களுக்கு இந்த நிரந்தர வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டது. திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளாங்குளம் மீள்குடியேற்றக் கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்திற்கும்  இலுப்பைக்குளம் கிராமத்தில் உள்ள மற்றொரு குடும்பம் ஒன்றுக்குமே மேற்படி நிரந்தர வீடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தினால் ஒருங்கிணைப்பில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடுகள் ஐக்கிய இராச்சியத்தில் இயங்கி வரும் தமிழ் மருத்துவர் நிபுணர் சங்கமும் அமரர் வைத்தியர்-சேகரன் அவர்களின் ஞாபகாா்த்தமாக  கொழும்பு மருத்துவக் கல்லுாாி நண்பர்களின் நிதி அனுசரணைகளில்  இரு வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.