காத்தான்குடி மண்ணுக்கு இரட்டை பதக்கங்கள் புதிய கண்டுபிடிப்பாளர் போட்டியில் காத்தான்குடி பாறூக் முகம்மட் முனீர் சாதனை

இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் வருடாந்தம் தேசிய ரீதியில் நடாத்தும் (“Sahasak Nimavum” National Invention and Innovation competition is an annual event organized by the Sri Lanka Inventors Commission) போட்டியில் கடந்த வருடம் “Sahasak Nimavum 2020” காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த பாறுக் மொஹமட் முனீர் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, பங்குபற்றி தேசியரீதில் தங்கம் மற்றும் வெள்ளி என இரட்டைப் பதக்கங்களைப் வெற்றி பெற்றுள்ளார்.

இன்று 16.12.2021 கொழும்பில் அமைந்துள்ள NIBM Auditoriumல் நடைபெற்ற Sahasak Nimavum 2020ற்கான விருது வழங்கல் நிகழ்விலேயே பாறுக் மொஹமட் முனீர் அவர்கள் இரட்டைப் பதக்கங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். புத்தாக்கத்திற்காக ஒருவருக்கு இரண்டு கண்டு பிடிப்புக்களுக்காக இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது கிழக்கு மாகாணத்தில் இதுவே முதன் முறை என்பதுடன் இலங்கை வரலாற்றில் 2வது தடவையாகும்.
1. தங்கப் பதக்கம் – REMOTELY CONTROLLABLE SMART SWITCHING DEVICE, SYSTEM AND ASSOCIATED METHOD
2. வெள்ளிப் பதக்கம் – MULTI-FUNCTIONAL SMART WATER DISPENSING DEVICE, SYSTEM AND ASSOCIATED METHOD
இவர் கடந்த 2019இல் “REMOTELY CONTROLLABLE SMART SWITCHING DEVICE, SYSTEM AND ASSOCIATED METHOD” எனும் சாதனத்தை கைத்தொழில் மற்றும் வழங்கல் அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள கைத்தொழில் அபிவிருத்தி சபையினுடைய 50ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்ட “INNOtec 2019” போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் அடிப்படையில் இவரது கண்டுபிடிப்பை ஆய்வுக்குட்படுத்தி மக்கள் இலகுவாக நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவதற்கேற்ற வகையிலும் இது தயாரிக்கப்பட்டுள்ளதால் இந்த கண்டுபிடிப்புக்காக கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் விருது வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.