கிழக்கு மாகாண பிரஜைகள் வரவு செலவு திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு,கிழக்கு ஆளுனர், யுனிசெப் பிரதிநிதி பங்கேற்பு

ஹஸ்பர் ஏ ஹலீம், 

கிழக்கு மாகாண பிரஜைகள் வரவு செலவு திட்டம் உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கும் நிகழ்வு இன்று இரவு (15) திருகோணமலை  ஜேகப் பீச் ஹோட்டலில் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் தலைமையில் இடம் பெற்றது  2021ம் ஆண்டு கிழக்கு மாகாண சபையால் தயாரிக்கப்பட்ட வரவு செலவு திட்டமானது மக்களது கருத்துக்களை உள்வாங்கி தயாரிக்கப்பட்டதுடன் குறித்த விடயங்கள் மாகாணத்தில் என்ன அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டமை தொடர்பான முன்வைப்புக்கள் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது .

கிழக்கு மாகாணத்தில் செயற்படுத்தப்படும் திட்டங்களானது மக்கள் பங்கேற்புடன் செயற்படுத்தம் போது அது மேலும் செயற் திறனாக அமையும் என்பது தொடர்பிலும் எதிர்வரும் காலங்களில் மாகாணத்தின் வளர்ச்சிக்கு பாரிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இலங்கையில் ஏனைய மாகாண சபைகளை விடவும் மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து இவ்வாறான பட்ஜட்டினை திறம்பட நடைமுறைப்படுத்துவதில் கிழக்கு மாகாண சபை ஒரு முண்னுதாரனமாகும் .

யுனிசெப் மற்றும் ஐரோப்பிய யுனியன் இணைந்து இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி Christian skoog அவர்களின் முன்னிலையில் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத்   அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

யுனிசெப் அமைப்பின் சமூகக் கொள்கைக்கான பிரதானி Louise moreira Daniels சிறுவர் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை இதன் போது தெளிவுபடுத்தினார்.

குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.