கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவன் ஜஷிப் அஹமட் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை.

(எஸ்.அஷ்ரப்கான்) பேராதனை பல்கலைக் கழகத்தின் (Rotaract Club)  பினால் தேசியரீதியாக நடத்தப்பட்ட புகைப்பட போட்டியில் மாணவர்களுக்கான பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை  விஞ்ஞான பிரிவு மாணவன் ஜஷிப் அஹமட் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதற்கான இம் மாணவனுக்கு பணப்பரிசில் மற்றும் புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.

பாடசாலையின் அதிபர் எம். ஐ. ஜாபிர் தலைமையில் குறித்த மாணவன் பாராட்டி கௌரவிக்கும்  நிகழ்வில் பாடசாலையில் புகைப்பட மற்றும் ஒளிபரப்பு கழகத்தின் பொறுப்பாசிரியர் ஷஃபி எச். இஸ்மாயில் உப பொறுப்பாசிரியர்களான எம்.வை.எம்.ரகீப், எம்.எச்.எம். முஸ்தன்சிர் போன்றோரும் கலந்து கொண்டனர்.