றிஸ்கான் முகம்மடின் முயற்சியால் கல்முனையில் சீசீரீவி  இலவச பயிற்சிநெறி

(பொலிவேரியன், மாளிகைக்காடு நிருபர்கள்)
அம்பாறை மாவட்டத்தைச்
சேர்ந்த, தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த
இளைஞர்களுக்கு ஐக்கிய இளைஞர் சக்தியினால் நடாத்திய மாபெரும் இலவச
ஒருநாள் இலவச பயிற்சி நெறி  புதன்கிழமை கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயலாளரும் அமைப்பாளருமான றிஸ்கான் முகம்மடின்
முயற்சியினால், ஒருநாள் நிகழ்வாக இடம்பெற்ற இந்தப் பயிற்சி நெறியில்
ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான
மயந்த திஸாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
நனச கொம்பியூடர் அகடமியின் விரிவுரையாளர் ரணவக்க வளவாளராகக் கலந்து கொண்டு இந்தப் பயிற்சிப் பட்டறையை சிறப்பாக நடாத்தினார்.
200க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கலந்துகொண்டு பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள்வழங்கப்பட்டன.

smart