தன்வசம் வைத்திருந்த கட்டுத்துப்பாக்கியை வெடிக்க வைத்து குடும்பஸ்தர் தற்கொலை-வாகரையில் சோகம்

எஸ்.சபேசன்

வாகரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மன் தேரோடிய கரைச்சை பிரதேசத்தில் தனது வயல் கண்காண்ணிப்பில் இருந்த குடும்பஸ்தர் தன்வசம் வைத்திருந்த துப்பாக்கியை வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த (13) மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான  ராஜநாதன் நரேஸ்காந் வயது (29) தனது வீட்லிருந்து தனது மனைவியுடன் ஏற்பட்ட தகறாற்றின் பின்னர் தனது வயலை பார்வையிட வயல் பிரதேசத்தில் அமைத்துள்ள தற்காலிக அமைவிடத்திற்கு சென்றுள்ள நிலையில் மறுநாள் தனது வாடியில் மரணமடைந்துள்ள நிலையில் அவர் மேல் துப்பாக்கி ஒன்று காணப்பட்டதாக உறவினர் ஒருவர் சம்பவத்தைக் கண்டு உறவினர்களிடம் தெரிவித்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

வாகரை சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக   சம்பவ இடத்திற்கு சென்ற வாழைச்சேனை பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி  வி.ரமேஸ்சானந்தன்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.