திணைக்களங்களுக்கிடையிலான உற்பத்தி திறன் போட்டியில் சிறப்பு பாராட்டு சான்றிதழ் வென்றது களுதாவளை பிரதேச சபை.

(எருவில் துசி) கடந்த வருடங்களுக்கான உற்பத்தி திறன் போட்டியில் சிறப்பான செயற்பாடுகளை வெளிப்படுத்தியமைக்காக ம.தெ.எ.பற்று பிரதேச சபையானது நாடளாவிய ரீதியான ஆக்கத்திறன் போட்டியில் பங்கு பற்றியிருந்தது.

இதன் போது சிறப்பான செயற்பாட்டை மக்களுக்கு வழங்கியமைக்காகவும் அலுவலக முகாமைத்துவத்தினை திறம்பட பேணி வைத்திருந்தமை போன்ற பல சிறப்பான செயற்பாடுகளுக்காக சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேற்படி வெற்றியினை ஈட்டியமைக்கு அயராது பாடுபட்ட உத்தியோகத்தர்கள் சிறப்பாக வழிநடத்திய முன்னாள் செயலாளர் க.லக்ஷpமிகாந்தன் ஏனைய ஊழியர்கள் அனைவருக்கும் தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்கள் நன்றியை தெரிவி;த்துக் கொண்டதுடன் பாராட்டுக்களையும் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.