கட்டாக்காலி மாடுகளை கட்டிவைத்துள்ள களுதாவளை பிரதேச சபை.

 

ம.தெ.எருவில் பற்று பிரதேச சபை எல்லைபரப்பினுள் கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்ட தொல்லை காரணமாக கட்டாக்காலி மாடுகள் பிரதேச சபை ஊழியர்களினால் கட்டப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் மேற்படி விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் மேற்படி விடயம் தொடர்பாக மாடுகளின் உரிமையாளர்களுக்கு முறையாக அறிவித்தும் தமது மாடுகளை பராமரிக்காது வீதிகளிலும் பொது இடங்களிலும் பகல்,இரவு வேளை களில் அலைந்து திரிவதனால் மக்களுக்கு பாரிய அசௌகரியமாக காணப்பட்டது மேலும் வீதிகளில் அதிகளவு கால் நடைகள் தரித்திருப்பதனால் பாரிய விபத்துக்கள் ஏற்பட்டு உயிராபத்துக்களும் இடம்பெற்றுள்ளது. எனவே குறித்த கால் நடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை என எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.