மழையால் முடங்கி கிடக்கும் மக்கள்.

கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக எருவில் கிராமத்தின் பல குடியிருப்புக்கள் நீரில் மூழ்கி உள்ளதால் வீட்டை விட்டு பெளியேற முடியாத நிலை காணப்படுகின்றது. கொங்கிறிட் வீதிகள் அமைக்கப்பட்ட காரணத்தினால் நீர் வழிந்தோட முடியாத நிலை காணப்படுவதுடன் நீரை வெட்டி வெளியேற்ற பிரதேச சபை உறுப்பினர் சி.காண்டீபன் அவர்கள் முயற்சி மேற்கொண்ட போது தமது வீடுகளுக்கு முன்பாக வெட்ட வேண்டாம் என மக்கள் இடையூறாக உள்ளதாகவும் அறியமுடிகின்றது. இருந்தும் வட்டார உறுப்பினர் சி.காண்டீபன் அவர்களும். தொழில் நுட்ப உத்தியோகத்தரின் வழிகாட்டுதலில் தவிசாளரின் ஆலோசனையுடன் நீர் வழிந்தோடும் வகையில் JCB இயந்திரம் மூலம் தற்காலிக வடிகாண் வெட்டப்பட்டு நீரை வெளியேற்றும் செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.