ஆயுள்வேத மத்திய மருந்தகத்திற்கான காணி உரிமப் பத்திரம் கையளிப்பு.

அரச காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் அரச திணைக்களங்களுக்கு அரச காணிகளை கையளிக்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாஞ்சோலை ஆயுள்வேத மத்திய மருந்தகத்திற்கான காணி கையளிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் வைத்தியர் திருமதி.ஆர்.சிறிதர், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், மாஞ்சோலை ஆயுள்வேத மத்திய மருந்தக பொது வைத்திய அதிகாரி ஏ.நளீம்டீன், செயலக நிருவாக உத்தியோகத்தர் எஸ்.அப்துல் ஹமீட், பிரதேச செயலக காணிக்கிளை உத்தியோகத்தர்கள், மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாஞ்சோலை ஆயுள்வேத மத்திய மருந்தகத்திற்கான காணி ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவினால்; கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் வைத்தியர் திருமதி.ஆர்.சிறிதரனிடம் கையளிக்கப்பட்டது.