கொவிட் – 19 இற்குப் பிந்தியதான உலகத்திற்கு மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பும் தலைமைத்துவமும்.

(ரக்ஸனா)

கொவிட் – 19 இற்குப் பிந்தியதான உலகத்திற்கு மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பும் தலைமைத்துவமும்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டுஇ மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மாற்றுத்திறனாளிகள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று வெள்ளிக்கிழமை(10) களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

அணுகும் வசதி மற்றும் நிலைபேறான தன்மையுடன் கூடிய கொவிட் – 19 இற்றுப் பிந்தியதான உலகத்திற்கு மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பும்இ தலைமைத்துவமும்இ எனும் தொணிப்பொருளில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது மாற்றுத்திறனாளிளான சிறார்களின் சித்திர போட்டியும்இ கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்இ அதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் வரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம்இ மண்முனை தென் எருவில் பற்றுஇ பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன் மற்றும் மாற்றுத்திறனாளிகள்இ அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்னர்.