உயிர்வாழ உரிமை இருந்தும் உயிர் பறிக்கப்பட்டது ஏன் இதுதான் மக்கள் போராட்டமாக அமைந்துள்ளது. அருட்பணி சூ.ஜெயபாலன் குரூஸ் அடிகளார்

( வாஸ் கூஞ்ஞ)

இரண்டாம் உலக யுத்தத்தின் பிற்பாடு ஏற்பட்ட மாபெரும் அழிவு, உயிரிழப்பு, உடமைகள் அழிப்பு இவைகள் எதிர்காலத்தில் உலகெங்கும் நடைபெறக்கூடாது என்றே ஐ.நா.சபை உருவாக்கப்பட்டது. உயிர்வாழ உரிமை இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக உறவினர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என அருட்பணி சூ.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

வெள்ளிக் கிழமை 10 ந் திகதி (2021.12.10) அன்று அனைத்து உலக மனித உரிமைகள் தினம் இவ் தினத்தை முன்னிட்டு மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட அருட்பணி சூ.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தொடர்ந்து இங்கு தெரிவிக்கையில்.

டிசம்பர் மாதம் 10 ந் திகதி அனைத்து உலக மனித உரிமைகள் தினம் ஆகவே இந்நாளில் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாளாகும்.

இந்த நாள் எதற்காக உருவாக்கப்பட்டது என்றால் இரண்டாம் உலக யுத்தத்தின் பிற்பாடு ஏற்பட்ட மாபெரும் அழிவு, உயிரிழப்பு, உடமைகள் அழிப்பு இவைகள் எதிர்காலத்தில் உலகெங்கும் எங்கும் நடைபெறக்கூடாது என ஐ.நா.சபை உருவாக்கப்பட்டது.

இந்த சபைக்கு அத்திவாரமாக அமைந்துள்ளது அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஆகும்.

இதைத்தான் நாங்கள் இன்று இதை நினைவு கூறுகின்றோம். மன்னாரில் இன்று நாங்கள் சொற்ப மக்களுடன் இதை நினைவு கூர்ந்து இங்கு சமூகமளித்து நிற்கின்றோம்.

இங்கு நிற்பவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்களுக்காக தங்கள் உரிமையைக் கோரி நிற்கின்றார்கள்.

அனைத்துலக மனித உரிமை சாஸ்திரத்தின் முதலாவது சரத்து ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ உரிமையுண்டு.

ஆகவே இந்த மனித உரிமை அனைத்து உலக மக்களாலும் மதிக்கப்படுகின்றது. இதை யாராலும் பறிக்கப்படாத ஒன்றாகும்.

இதற்காகத்தான் மக்கள் இன்று போராடுகின்றனர் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவகள் எங்கே? என்று. எங்கள் அனைவருக்கும் வாழ்வதற்கு உரிமையுண்டு என்பதை வலியுறுத்தித்தான் இன்று இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறுகின்றது.

மனித நேயம் கொண்ட யாவரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் மனித உயிரை மதிக்க வேண்டும் என்று இந்த நாளில் நான் இதை கேட்டு நிற்கின்றேன் என்றார்.(60)