கரடியனாறு மகா வித்தியத்தில் பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழு அலகு திறந்து வைக்கப்பட்டது.

கரடியனாறு மாகா வித்தியாலய பாடசாலையின் அதிபர் ஆர்.செந்தில்நாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஏறாவூர் பற்று செங்கலடி  பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் , கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஜெயக்குமணன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன் கரடியனாநு பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் ஏ.பிரபாகர், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியொகத்தர் நஸா றியாஸ், ஆசிரிய ஆலோசகர் ரீ.குணரெத்திணம், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரீ.ஜெயசாந்தினி ஆகியோருடன் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை சமூகம் பெற்றோர் பழையமாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அதிதிகளுக்கு மாணவர்களால் பூமாலை அணிவிக்கப்பட்டு பான்ட் வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு மங்கள விழக்கேற்றலின் பின் ‘சிறுவர் பாதுகாப்பு அலகு” திறந்து வைக்கப்பட்டது.
பின் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிதிகள் உரை இடம்பெற்றதுடன் மாணவர்களுக்காக அடையாள அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது.
சிறுவர்களை பாதுகாத்தல், அவர்கள் தொடர்பான பிரச்சிணைக்கு தீர்வு வங்குதல், சிறுவர்களுக்கான ஆலோசணை வழங்கல், கற்றல் மற்றும் உளநல செயற்பாட்டை விருத்தியடையச் செய்தல் என்பன இவ் அலகின் திட்டங்களாகும்.