பிரபல பாடகியுடன் வடிவேலுவை சந்தித்த பிக்பாஸ் மதுமிதா

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் எலிமினேஷன் ஆன நிலையில் அவர் பிரபல பாடகி உடன் இணைந்து வைகைப்புயல் வடிவேலுவை சந்தித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒருவர் ஜெர்மனியை சேர்ந்த தமிழ் பெண் மதுமிதா என்பதும் அவரது விளையாட்டு மற்றும் கொஞ்சும்தமிழ் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல பாடகி தீயுடன் வைகைப்புயல் வடிவேலுவை பிக்பாஸ் மதுமிதா சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. வடிவேலு நடித்து வரும் ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்திற்கு பாடகி தீயின் தந்தை சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து வருகிறார் என்ற நிலையில் பாடகி தீயுடன் மதுமிதா வடிவேலுவை சந்தித்து இருப்பதால் மதுமிதா இந்த படத்தில் நடிக்கிறாரா? அல்லது பாடல் பாடப் போகிறாரா? போன்ற யூகங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.