பாராளுமன்ற உறுப்பினருக்கு அஞ்சலி.

     (பொன்ஆனந்தம் )மறைந்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சேனையூர் மத்திய கல்லூரியின் முன்னாள் முதல்வருமான க. துரைரட்ணசிங்கம் அவர்களின் அரையாண்டு நினைவஞ்சலி நிகழ்வு சேனையூர் மத்திய கல்லூரி மண்டபத்தில் ஞாயிறு மாலை 3.00மணியளவில் நடைபெற்றது.
.இங்கு அவரது நினைவுகள் தாங்கிய எங்கள் பெருநிழல் எனும் கவிதைநூல் ஒன்றும் வெளியிடப்பட்டதுடன், மலரஞ்சலியும் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல்வாதிகள் இலக்கியவாதிகள் என அதிகளவிலோனர்கலந்து கொண்டு மலரஞ்சலியை செலுத்தினர். இந்நிகழ்வை அனாமிகா பண்பாட்டு மையமும், சிறிகணேச விளையாட்டு கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.