15 இலட்சம் பணம் ,ஒன்றரை பவுன் தங்க நகை கொள்ளை ஒருவர் கைது.

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உவர் மலை பகுதியில் கடந்த மாதம் 23.11.2021 அன்று ஒரு வீட்டில் 15 இலட்சம் ரூபா பணமும் ஒன்றரை பவுன் தங்க நகையும் களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரனையினை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று(03) களவு போன வீட்டில் சாரதியாக கடமையாற்றி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக திருகோணமலை  தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது உரிய வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து உரிய சாரதி தலைமறைவாகியிருந்தார். இவரை மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளில் தேடுதல் நடாத்தி வந்த பொலிஸார் மட்டக்களப்பில் தனது இரண்டாவது மனைவியின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்தப்பட்ட நபர் திருகோணமலை பகுதியை சேர்ந்த வயது (34) குடும்பஸ்தர் எனவும் தெரியவருகிறது.
 இவரிடமிருந்து ஒன்பதரை இலட்சம் ரூபா பணமும் ஒன்றரை பவுன் தங்க நகையும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை உரிய பொருட்களுடன் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையகப் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.