திருகோணமலையில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்றப்பட்ட பிரதேசங்களில் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது

அதன்படி நேற்று (03) இவ் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும்  வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது

நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி முதல்கட்டமாக  60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேற்றையதினம் ஆரம்பித்துள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது

இவ்வாறு முன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படுவதுடன் இவ் முன்றாவது பூஸ்டர் தடுப்பூசியினை மக்கள் ஆர்வத்துடன் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது

திருகோணமலையில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட  60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாது இவ் முன்றாவது பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு திருகோணமலையில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன்

நாளையதினம் உப்புவெளி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் தடுப்பூசி வழங்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.