இறக்கக்கண்டி கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் பலி

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக்கண்டி பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிசார்  தெரிவித்தனர்

இன்று (04) காலை 11 மணியளவில் இறக்கக்கண்டி கடற்கரையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது

இவ்வாறு உயிரிழந்தவர்கள் இறக்கக்கண்டி வாழைத்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த இறக்கக்கண்டி அல் ஹம்ரா மகா வித்தியாலயத்தின் மாணவர்களான மௌலவி அப்துர் ரஹ்மானின் மகன் முகம்மது அர்ஹம் (15வயது) மற்றும் அதே பிரதேசத்தை சேர்ந்த உவைஸ் அவர்களின் மகன் முஹமட் சஹி (14 வயது)   எனவும் தெரியவந்துள்ளது

கொழும்பிலிருந்து வருகை தந்த உறவினர்களுடன்  இவ் இரண்டு மாணர்களும்  இறக்கக்கண்டி கடற்கரையில்  நீராட சென்ற போது நீரில் மூழ்கியதாகவும் நீரில் மூழ்கிய சமயத்தில் கூச்சலிட்டு கத்திய போதும்  கரையிலிருந்த ஒரு சிலரின் உதவியுடன் காப்பாற்ற முற்பட்ட போதிலும் பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளதகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குச்சவெளி பொலிசார் தெரிவித்தனர்

உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்றக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.