மட்டக்களப்பில் பாரிய மண் கடத்தல்.

(ரீ.எல்.ஜவ்பர்கான்) மட்டக்களப்பு கறடியனாறு பொலிஸ் பிரிவில் பாரிய மண் கடத்தல் முறியக்கப்பட்டதுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி பண்டார தெரிவித்தார்
நேற்று மாலை(2) கரடியனாறு கொஸ்கொல்ல பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி 3 டிப்பர் மற்றும் 2 உழவு இயந்திரங்களில் மண் கடத்தலில் ஈடுபட்ட ஐவரை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.