குளவி கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழப்பு.

(எப்.முபாரக் )திருகோணமலை – தென்னமரவாடி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம்  காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கனகசபை குகநாதன் (69வயது) எனவும் பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.
 வீட்டிலிருந்து மாடு பார்ப்பதற்காக சென்ற போது மரத்திலிருந்து குளவி கூடு கலைந்து குறித்த நபரை குத்தியதாகவும்  இதனை அடுத்து புல்மோட்டை தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரின் சடலம் தற்போது புல்மோட்டை தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.