ஆரையூர் அருளுக்கு ஆறு கௌரவம்

கலாசார அலுவல்கள் திணைக்களம், மண்முனைப்பற்று பிரதேச செயலகம் கலாசார அதிகாரசபை நடாத்திய இலக்கியப் போட்டிகளில், ஆறு போட்டிகளில் ஆரையூர் அருள் வெற்றியீட்டியுள்ளார்.

குறித்த போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களை பாராட்டி கௌரவித்து, நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வு அண்மையில் ஆரையம்பதி கலாசார மண்டபத்தில், பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் நடைபெற்றிருந்தது.

திறந்த மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளிலேயே ஆரையூர் அருள் ஆறு போட்டிகளி;ல் வெற்றிபெற்றுள்ளார். பல நூல்களை எழுதி வெயிட்டுள்ள இவர், பிரதேச, மாவட்ட, மாகாண, தேசிய விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.