கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம்

(படுவான் பாலகன்)  மண்முனை தென்மேற்கு பிரதேசசபையில் 6வருடங்களுக்கு மேலாக தற்காலிக, அமைய, பதிலீட்டு அடிப்படையில் கடமைபுரியும் ஊழியர்கள் கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள மண்முனை தென்மேற்கு பிரதேசசபை அலுவலகத்திற்கு முன்னால் புதன்கிழமை(01) தமக்கு நிரந்தர நியமனத்தினை வழங்குமாறு கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஊழியர்கள், நியமனத்தை நிரந்தரமாக்குவதற்கு கிழக்கு மாகாண ஆளுனர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் முன்வர வேண்டுமென தெரிவித்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதன்போது, நிரந்தர நியமனத்தினை பெற்றுத்தருமாறு கோரிய மகஜரினை, மண்முனை தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் சி.புஸ்பலிங்கத்திடம் கையளித்தனர்.