மூதூர் அல்ஹிலால் மத்திய கல்லுாரின் பழைய மாணவன் தேசிய இராணுவ தடகளப்போட்டியில் சாதனை

எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டம் மூதூர் அல்ஹிலால் மத்திய கல்லுாரின்  பழைய மாணவன் தேசிய இராணுவ தடகளப்போட்டியில் சாதனை படைத்துள்ளார்.

 நடைபெற்ற 2020/2021 ஆண்டுக்கான 57 ஆவது தேசிய இராணுவ தடகளப்போட்டியில்  மூதூர் அல் ஹிலால் மத்திய கல்லூரியின் பழைய மாணவனும், கொழும்பு பல்கலைகழகத்தின்மாணவருமான ஆர்.எம்.நிப்ராஸ்   இரண்டு தங்கம் உள்ளடங்களாக ஒரு வெள்ளிப்பதக்கம் பெற்று மொத்தமாக மூன்று பதக்கங்களுடன் சாதனை படைத்துள்ளார்.
இதனடிப்படையில்  1500M ஓட்டம் முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கம்.
4 X 1500M ஓட்டத்தில் முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கம்.
4 X 800M ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் சுவீகரித்துள்ளார்.
இவர் பாடசலை காலத்தில் பாடசாலை மட்ட , மாவட்ட,மற்றும்  மாகண மட்ட ,தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை பெற்றதோடு, கடந்த 2020 ஆண்டு தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் இலங்கை சார்பில் கலந்துகொண்டு 800m ஒட்டப்போட்டியில் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் அடுத்த 2022ஆம் ஆண்டில்  சாதனை படைத்திட  திருகோணமலை மாவட்டம் முதூர் அல்ஹிலால் மத்திய கல்லூரி சார்பில் அதிபர் கே.றஸிம் மற்றும் பாடசாலை சமுகம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.