வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பில் இரு தடுப்பூசி ஏற்றிக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் கோளாவில் வைத்திய பராமரிப்பு சிகிச்சை நிலையத்திலும் இன்று இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் இரு தடுப்பூசியினையும் ஏற்றிக்கொண்டவர்களுக்கு மாத்திரமே குறித்த மூன்றாவது தடுப்பூசி ஏற்றப்படுவதாக எனவும் என ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
அதாவது இரு தடுப்பூசியினை ஏற்றி மூன்று மாதங்கள் முடிவடைந்தவர்களுக்கு மாத்திரம் பைசர் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
ஆகவே 60 வயதிற்குமேற்பட்ட இரு தடுப்பூசியினை ஏற்றி மூன்று மாதத்தினை பூர்த்தி செய்தவர்கள் மூன்றாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறும்; அவர் கோரிக்கை விடுத்தார்.