அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பிரதேசத்தில் புதிய பொலிஸ்  நிலையம் திறந்து வைப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை பிரதேசத்தில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று இன்று (29.11.2021) திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 20வது புதிய பொலிஸ் நிலையமாக இந்த பொலிஸ் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.எச். சுஜித் பிரியந்த தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பாரை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.வை. செனவிரத்ன (DIG) பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.

கிழக்குமாகாண விசேட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி எல்.கே.டப்ளியு. கமல் சில்வா  அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய நடைபெற்ற இந்த பொலிஸ் நிலைய திறப்பு விழாவில், அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜெயந்த ரத்நாயக்க, கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி. எச்.டி.எம்.எல்.வுத்திக உட்பட மத்திய முகாம், சவளக்கடை, சாய்ந்தமருது, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி, கடற்படையினர்;, ராணுவ அதிகாரிகள், சர்வ மதத்தலைவர்கள், அரச அதிகாரிகள், சிவில் சமூகத்தினர் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்வின்போது பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு இரண்டு பொலிஸ் முச்சக்கர வண்டிகளுக்குரிய ஆவணங்களை புதிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆர்.ஜெ. சுஸார திலங்க ஜெயலாலிடம் பிரதம அதிதயால் வழங்கிவைக்கப்பட்டன.
நிகழ்வின்போது பிரதம அதிதி அவர்களினால் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு இரண்டு பொலிஸ் முச்சக்கரவண்டிகளுக்குரிய ஆவணங்களை புதிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அமைக ஆர்.ஜெ. சுஸார திலங்க ஜெயலாலிடம் கையளிக்கப்பட்டது.