சமைக்கும் போது எரிவாயு அடுப்பு வெடித்து தீப்பற்றியுள்ளது

ஹஸ்பர் ஏ ஹலீம்_

கிண்ணியா – ஆலங்கேணி பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (28) பகல் சமைக்கும் போது எரிவாயு அடுப்பு வெடித்து தீப்பற்றியுள்ளது

இதனால் வீட்டிலிருந்தோர் வெளியில் ஓடி பிறரின் உதவியுடன் தீயை அனைத்துள்ளனர்.
இச்சிலிண்டர் வெடிப்பினால் ஏற்பட்ட தீயால் ஜன்னல் எரிந்துள்ளது
எனினும் எவருக்கும் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை