குறிஞ்சாக்கேணி படகு விபத்து விவகாரத்தில் அப்பாவிகளை கைது செய்வதை விட்டு உண்மை சூத்திரதாரிகளை கைது செய்யுங்கள்

ஹஸ்பர் ஏ ஹலீம்

குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உண்மையை மறைத்து அப்பாவிகளை கைது செய்வதாக இருக்கக்கூடாது அனுமதி கொடுத்ததற்காக நகர பிதா நளீமையையோ படகு ஓட்டுனரையோ கைது செய்ய முடியாது  எனவும் முன்னால் பிரதம மந்தி ரணில் விக்ரமசிங்கவினால் அடிக்கல் நடும் போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அப்போது பாலத்துக்கான அடிக்கல் நடும் போது ஏன் என்னோடு தொங்கிக் கொண்டு வரவேண்டும் என முன்னால் பிரதியமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் அவரது இல்லத்தில் இன்று (27)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ன உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் முன்னால் பிரதமர் ரணில் உடன் குறிஞ்சாக்கேணி பாலத்துக்கு  அடிக்கல் நடும் போது நிதி ஒதுக்கவில்லை என கூறியிருந்தார் இதற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.