தேசிய ரீதியிலான விஞ்ஞான ஆராய்ச்சிப்போட்டி முதல் 10 இடங்களுக்குள் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தெரிவு

(கமல்)
தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2019/2020 ஆம் ஆண்டிற்கான தேசிய ரீதியிலான விஞ்ஞான ஆராய்ச்சிப்போட்டி முதல் 10 இடங்களுக்குள் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த போட்டியயில் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் ஆகிய மட்டங்களில் நடைபெற்றது. இப் போட்டியில் பல பல்கலைக்கழகங்களும்,பாடசாலைகளும் பங்குபற்றியிருந்தன.
அவற்றுள் தேசிய மட்டத்தில் முதல் 10 இடங்களுள்  மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டது. இவர்களுக்கான கௌரவிப்பு 16.11.2021 ந் திகதி பண்டார நாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கொவிட் சூழ்நிலைக்கு மத்தியிலும் பேராசிரியர்,எம்.சிதம்பரேசன், கிழக்குப்பல்கலைக்கழகம் அவர்களின் மேற்பார்வையில் மட்/பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையினைச் சேர்ந்த இரசாயனவியல் ஆசிரியர் திரு.செல்வராஜா- தேவகுமார் அவர்களின் வழிகாட்டலில் வரதாராஜன்-சித்தசன், குணவர்த்தன அபிலாசனன், நடேசன்-கிருந்திகரன் ஆகிய மாணவர்கள்   ஆய்வு முடிவினை சமர்ப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.