மட்டக்களப்பு இரத்த வங்கியில் குருதித் தட்டுப்பாடு – தீர்க்க இரத்தானம்

????????????????????????????????????

ந.குகதர்சன்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், இளைஞர் பாராளுமன்றம் என்பவற்றின் ஏற்பாட்டில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் இரத்ததான முகாம் இன்று இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஷீல் தலைமையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் இளைஞர், யுவதிகள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த இரத்ததானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஷீல் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் வைத்தியர் ஜே.எவஞ்செலினா  (Dr.J.Evanjelene)  தலைமையிலான இரத்த வங்கி பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????