பிறந்த உடன் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த அவலம்;மட்டுவிலில் சம்பவம்

பிறந்த உடன் சிசுவினை மண்ணுக்குள் புதைத்து கொல்ல எத்தனித்த சம்பவம் ஒன்று 23/11 செவ்வாய்கிழமை சாவகச்சேரி மட்டுவில் வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
        18 வயதுப் பெண் ஒருவருக்கு காலை 4மணிக்கு பிறந்த பெண் குழந்தை ஒன்றே இவ்வாறு பை ஒன்றினுள் இட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளது. இதனை அவதானித்த அயலவர்கள் விரைந்து செயற்பட்டு குழந்தையை உயிருடன் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக குழந்தை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த 24வயது இளைஞனுக்கும்-மட்டுவில் வடக்கைச் சேர்ந்த 18வயது யுவதிக்கும் பிறந்த பெண் சிசுவே இவ்வாறு மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வருகிறது.இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.