சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக வெருகல் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்,  கதிரவன்
திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் சட்ட விரோத மணல் அகழ்விற்க்கு எதிராக பொதுமக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

இன்று (22) திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது

இவ் ஆர்ப்பாட்டம் வெருகல் மாவடிச்சேனை நாதனோடை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வதாகவும் கடந்த ஏழு மாதத்தில் நாட்டில் 1300 மணல் அகழ்விற்காக அனுமதி பத்திரம் வழங்க பட்டுள்ளதாகவும் அவற்றில் 80 அனுமதிப்பத்திரம் வெருகல் பிரதேசத்தில் மணல் அகழ்விற்காக வழங்க பட்டுள்ளதாகவும் பிரதேசத்தின் அதைவிட அதிகமாக சட்டவிரோத மணல் அகழ்வுகளும் இடம்பெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

இவ் ஆர்ப்பாட்டத்தில் எதிர்கால சந்ததிக்கு நீ விட்டுச்செல்லும் ஒரே சொத்து மண்,கிளஸ்க்கோ மாநாட்டில் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்து,அற்ப பணத்திற்கு மண்ணை அடமானம் வைக்காதே,கோடீஸ்வரர்கள் வயிறு வளர்க்க ஏழைகள் எமது வயிற்றில் அடிக்காதே,எங்கள் மண் எமக்கான உரிமை மற்றும் இன்று பணமாக்க இருக்கும் மண் நாளை உன் பிணத்தை அடக்கம் செய்ய இருக்காது என்ற பதாதைகளை ஏந்தியவண்ணம் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதோடு

இவ்வாறு சட்டவிரோதமாக அகலப்படும் மணல் வெளிமாவட்டங்களுக்கு மாற்றுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாக கோஷமிட்ட பொதுமக்கள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு நடைபெறும் பிரதேச வழங்களை சூறையாடும் செயற்ப்பாடுகளுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வாறு இச் செயற்ப்பாட்டை தடுக்காவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி பிரதான வீதினை மறித்து பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க நேரிடும் என்றும் எமது மண்ணை பாதுகாத்த்து தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்

மேலும் வெருகல் பிரதேச செயலகத்தில் இவ் சட்டவிரோத மணல் அகழ்விற்க்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்யுமாறும் வலியுறுத்தி பொதுமக்களினால் மகஜர் ஒன்றும் கையாளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.