மக்கள் எதிர் கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒன்றிணைவோம்;

திருகோணமலையில் கலந்துரையாடல் ..!
(அ . அச்சுதன் )
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையுடன் திருகோணமலை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் வட்டமேசை கலந்துரையாடல் மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் நிசாக்கா தலைமையில் இன்று (22) காலை 10.00 மணிக்கு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது பிரதேச மக்கள் எதிர்நோக்கும் மீன் பிடிப்பிரச்சனை, போக்குவரத்து, வைத்திய வசதி, உட்பட பல அடிப்படை பிரச்சிணைகள் தொடர்பாக அரச அதிகாரிகள்,  உள்ளூராட்சி மன்ற தலைவர்கள்,  பொலிஸார், கடற்படையினர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இடம் பெற்று அவர்களுக்கான தீர்வுகளும் அரச அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.