ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன தலைமையிலான உயர்மட்ட குழு நிந்தவூர்க்கு விஜயம்

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை(21) அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர்.

இது தொடர்பாக கலந்துரையாடல் ஐக்கிய தேசியக்  கட்சியின் நிந்தவூர் ஐக்கிய தேசியக் கட்சியின்  பிரதேச காரியாலயத்தில் பிரதேச அமைப்பாளர் எம் எம் எம் றிபாக் தலைமையில் இடம்பெற்றது.
.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருமான ருவான் விஜயவர்த்தன,   முன்னாள் பெற்றோலிய வளத்துறை பிரதி அமைச்சர் அனோமா கமகே  ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சன்பித் சமரசிங்க, ரத்னபிரிய அடங்கலான குழுவினர் இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர்