ஐக்கிய மக்கள் சக்தியினர் பொத்துவில் இன்ஸ்பெக்டர் ஏத்தம் பிரதேச மக்களோடு கலந்துரையாடல்

பாறுக் ஷிஹான்

ஐக்கிய மக்கள் சக்தியினர் அம்பாறை மாவட்டம் பொத்துவில் இன்ஸ்பெக்டர் ஏத்தம் பிரதேச மக்களோடு கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை (21) குறித்த பிரதேச மக்களுடானான சந்திப்பு ஒன்றை  கட்சியின் தமிழ் பிரிவுக்கு பொறுப்பான சகோதரர் ஜெகன் ஏற்பாடு செய்திருந்ததுடன் குறித்த சந்திப்பில் பொத்துவில் தொகுதி இளைஞர் அமைப்பாளரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான கபூர் நிப்ராஸ் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பில் பொத்துவில் தொகுதி பிரதான அமைப்பாளர் ஏ எச் அப்துல் ரகுமான் மற்றும் முன்னாள் லாகுகல பிரதேச சபை உறுப்பினரும் ஐக்கிய இளைஞர் சக்தியின் மாவட்ட பொறுப்பாளருமான பாட்டலியும் கலந்து கொண்டு எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன் போது மக்களின் குறைகளும் கேட்டு அதற்கான தீர்வுகளை எவ்வகையில் தீர்ப்பது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.